×

பால் உற்பத்தி குறையும் அபாயம்

பல்லடம், ஜூன் 18: பல்லடம், பொங்கலூர் பகுதியில் தற்போது காற்று பலமாக வீசத் துவங்கியுள்ளது. நிலத்தில் ஈரப்பதம் இல்லாததாலும், வெயில் காரணமாகவும், மேய்ச்சல் நிலங்கள் கருகி வருகின்றன. இதனால், கால்நடைகளுக்கு பசுந்தீவன பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. எனவே, பால் உற்பத்தி சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அடர்தீவனங்களை அதிக அளவில் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர். பால் உற்பத்தி சரிந்தால் செலவும் அதிகரிக்கும். இதை விவசாயிகளால் தாங்க முடியாது.

ஆவினை விட தனியார் பால் நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்கின்றன. இதனால், தனியார் நிறுவனங்களை நோக்கி விவசாயிகள் செல்ல துவங்குவர். ஏற்கனவே ஆவினுக்கு வரும் பாலின் அளவு குறைந்துள்ளது. பால் உற்பத்தி சரிவு ஆவினுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, ஆவின் நிறு வனம் பால் விலையை தனியாரை விட அதிக அளவு உயர்த்தினால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும்.

The post பால் உற்பத்தி குறையும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Palladam ,Palladam, Pongalur ,Dinakaran ,
× RELATED பல்லடம் பெரியாயிபட்டி கிராமத்தில்...